Guys help me....ennoda caste community certificate la "indhu kallar" nu potrukku....but central govt list la kallar nu irukku....ippa naan NIACL ku epdi pottu apply panna?
NIACL notific la oru line potukku, "Caste Name mentioned in certificate should tally letter by letter with Central Government list/notification".
டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய தேர்வுக் கட்டணம் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) கோரிக்கையை ஏற்று அது நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான கட்டணங்கள் திருத்தியமைக்கப்படுகின்றன. அதன்படி, நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு கொண்ட மாநில பணி தேர்வுகளுக்கான கட்டணம் ரூ.125-லிருந்து ரூ.200 ஆகவும், சார்நிலைப் பணிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.100-லிருந்து ரூ.150 ஆகவும் உயர்த்தப்படுகிறது.அதேபோல், எழுத்துத் தேர்வு மட்டும் கொண்ட பணிகளுக்கான தேர்வுக் கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும், முதல்நிலைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.75-லிருந்து ரூ.100 ஆகவும் அதிகரிக்கப்படுகிறது. ஆன்லைன் விண்ணப்ப பதிவு கட்டணம் (5 ஆண்டுகள் செல்லத்தக்கது) ரூ.30-லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படுகிறது.இதுவரை பிசி, பிசி (முஸ்லிம்), எம்பிசி வகுப்புகளைச் சேர்ந்த பட்டதாரிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வினை 3 முறை தேர்வுக் கட்டணம் செலுத்தாமல் எழுதலாம். இந்த கட்டணச் சலுகை பட்டப் படிப்பு கல்வித் தகுதியை பார்க்காமல் அனைத்து கல்வித் தகுதிகள் (எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2) கொண்ட இப்பிரிவினருக்கு நீட்டிக்கப்படும். திருத்தப்பட்ட புதிய தேர்வுக் கட்டணமும், கட்டணச் சலுகையும் கடந்த மார்ச் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.